ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு சென்ற முதல்வர்

260

சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் 75-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற  முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர் விழாவில் பேசிய அவர், பள்ளியில் படித்த நாட்களை நினைவுகூர்ந்தார்.

கல்வி என்பது வெறும் பட்டமல்ல, அறிவும் ஆற்றலும் தன்னம்பிக்கையும் துணிச்சலும் தரக்கூடியது என்று முதல்வர் குறிப்பிட்டார்.

மகளிர் அனைவருக்கும் கட்டணமில்லா பேருந்து சேவையை வழங்கியதன் மூலமாக பெண்குலத்துக்கு மாபெரும் சேவையை தமிழக அரசு உருவாக்கி இருப்பதாக கூறிய முதல்வர், சமூக வளர்ச்சியில் முன்னேறிய மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிக் காட்ட, திராவிட மாடல் கொள்கையின் படி இன்றைய அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

திராவிட இயக்கம் என்பதே ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற தத்துவத்தின் அடைப்படையில் உருவாக்கப்பட்ட இயக்கம் என்றும் முதல்வர் குறிப்பிட்டார்.