டெல்டாவில் ஸ்டாலின் இன்று அதிரடி ஆய்வு

345

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இல்லாத வகையில் மேட்டூர் அணையிலிருந்து வழக்கத்திற்கு முன்னதாகவே கடந்த 24ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலினால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

இதையடுத்த குறுவை சாகுபடிக்கான பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

இதைத் தொடர்ந்து நாகையை அடுத்த கருவேலங்கடை கிராமத்தில் நடைபெறும் கல்லாறு வடிகால் தூர்வாரும் பணியை முதல்வர் நாளை பார்வையிடுகிறார். 

அதன்பின்னர் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர் பகுதியில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்ட பின்னர், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா கொத்தங்குடி என்ற இடத்தில் வாய்க்கால் தூர்வாரப்பட்டுள்ள பணிகளை ஆய்வு செய்கிறார்.

அதையடுத்து  நாளை மாலை 4 மணியளவில் அங்கிருந்து புறப்படும் முதல்வர், நீடாமங்கலம் வழியாக தஞ்சை மாவட்டத்தில் தூர்வாரப்பட்டுள்ள பணிகளை பார்வையிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.