வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுக்கும் – மு.க.ஸ்டாலின்

  231
  cm mk stalin
  Advertisement

  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

  உ.பி. மாநிலத்தில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. 9 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

  கடந்த 300 நாட்களாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். அதனை மத்திய அரசு அலட்சியம் செய்ததன் விளைவுதான் உ.பி. மாநிலத்தில் தொடரும் நிகழ்வுகள் ஆகும்.

  Advertisement

  இத்தகைய கொந்தளிப்பு சூழ்நிலையை அறியச் சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டு உள்ளார். முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு திடீரென விடுவிக்கப்பட்டு உள்ளார்.

  இந்த கொந்தளிப்புக்கு காரணமானவர்கள் மீது நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

  3 வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப்பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுப்பதாக அமையும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும் என அவர் கூறியுள்ளார்.