இந்த முறை அதிகமாக இருக்கும் – முதலமைச்சர் நம்பிக்கை

346

மேட்டூரில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் இந்தாண்டு குறுவை மற்றும் சம்பா சாகுபடி பரப்பளவு பல லட்சம் ஏக்கர் அதிகரிக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரித்துள்ளார்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை 2 நாள் நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் சென்னை திரும்பும் வழியில் திருச்சியில் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது காவிரி டெல்டா மாவட்டங்களில் 4 ஆயிரத்து 418 கிலோ மீட்டர் தூரத்துக்கு தூர்வாரும் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

வேளாண் மக்களின் நலன்கருதி இந்தாண்டும் 61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குறுவைத்தொகுப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த முதலமைச்சர், கலவரம், சாதிமத மோதல்கள் இல்லாத அமைதி பூங்காவாக தமிழகம் திகழ்கிறது என தெரிவித்தார்.

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் பொய் குற்றச்சாட்டுகளை கூறி அரசியல் செய்து வருவதாக விமர்சித்தார்.