முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை

307

திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைத் தொடர்ந்து, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

கடைமடைப் பகுதிகளுக்கு மேட்டூர் அணை நீர் சென்று சேர்வதை உறுதிப்படுத்தவும், பருவமழையின்போது பயிர்கள் நீரில் மூழ்காமல் இருப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

டெல்டா மாவட்டங்களில் 2 நாள் ஆய்வுக்கு பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்.

இந்நிலையில், அனைத்து துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றம் செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

அப்போது, தேர்தல் வாக்குறுதிதியில் அளித்த திட்டங்களின் நிலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.