“தவறு செய்தால் தண்டனை நிச்சயம்” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

393
Advertisement

கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறைக் கண்காணிப்பாளர்கள், வனத்துறை அதிகாரிகள் மாநாடு மிகுந்த மனநிறைவை அளிப்பதாக அமைந்திருக்கிறது. எல்லோரும் மனம் திறந்து பல்வேறு கருத்துகளைச் சொல்லி இருக்கிறீர்கள். அரசுக்குப் பல்வேறு ஆலோசனைகளவழங்கியிருக்கிறீர்கள்.

தனிப்பட்ட முறையில் சொல்றதா இருந்தா- இந்த ஆட்சி சரியான திசையை நோக்கித்தான் சென்று கொண்டு இருக்கிறது என்பதை, உங்கள் மூலமாக நான் அறிந்து கொண்டேன். இந்த ஆட்சி மக்களோட பல்வேறு தேவைகளை நிறைவேற்றி வரக்கூடிய – அந்த அடிப்படையிலே, உங்களோட கருத்துகளின் மூலமாக நான் அறிந்து கொண்டு இருக்கிறேன்.

நாங்கள் உருவாக்கிய திட்டங்கள் மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களாக அமைந்திருக்கின்றன என்பதை- உங்களோட எண்ணங்கள் மூலமாகத் நான் தெரிந்து கொண்டேன். சுருக்கமா சொல்வதாக இருந்தால் – உங்களின் மூலமாக தமிழ்நாட்டின் முழு நிலைமையை நான் அறிந்து கொண்டு இருக்கிறேன். எனவே, அரசின் சார்பில் மட்டுமல்ல- தனிப்பட்ட முறையிலும் உங்கள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ரவுடிகளுக்கு அதிகாரிகள் துணை போகக்கூடாது .வனப்பரப்பை அதிகப்படுத்துவது, பசுமை சூழலை உருவாக்குவது வருங்கால தலைமுறையினருக்கு அவசியம் எல்லாம் என்னால் தான் என்ற எண்ணத்துடன் நான் செயல்படவில்லை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் நிறைவுரையாக பேசியுள்ளார் .