மாணவர்களுடன் மாணவரான முதலமைச்சர்

315

2025-ம் ஆண்டுக்குள் 8- வயதுக்குட்பட்ட அனைவருக்கும் கல்வி அளிப்பதே இலக்கு என்று முதலமைச்சர் மு.க,,ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் “எண்ணும் எழுத்தும்” என்ற முன்னோடி கல்வித்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, எழுதப்படிக்க கற்றுக் கொடுக்கும் திட்டம் இந்த திட்டத்தின் மூலம் தொடங்கப்படுகிறது.

இந்த திட்டத்திற்கான, கைபேசி செயலி, திட்டப்பாடல் ஆகியவற்றையும் முதல்வர் தொடங்கிவைத்தார்.

பின்னர், உரையாற்றிய முதல்வர், கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

5 வயதுக்குள் மாணவர்களின் சிந்தனை ஆற்றல் அதிகமாக இருக்கும் என்றும் அனைவருக்கும் கல்வி என்பதே திராடவிட மாடல் என்றும் அவர் தெரிவித்தார்.

நீதிக்கட்சி காலந்தொட்டு இன்று வரை கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதே திராவிடமாடலாக திகழ்கிறது என்றும் முதல்வர்  கூறினார்.

2025-ம் ஆண்டுக்குள் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் எழுதப்படிக்க கற்றுக்கொடுப்பதே இலக்கு என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதனை தொடர்ந்து, அரசு பள்ளியில் உள்ள வகுப்பறை, சமையலறை, கழிப்பறைக்கு சென்று முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

அப்போது ஆசிரியை ஒருவர் மாணவர்களுக்கு நீதிபோதனை வகுப்பு நடத்தியதை முதல்வர் ஸ்டாலின், மாணவர்களுடன் மாணவராக அமர்ந்து கவனித்தார்.