சென்னை தாம்பரம் அருகே திமுக சார்பில் நடைபெற உள்ள கபடி போட்டி தொடக்க விழாவையொட்டி வைக்கப்படு இருந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உருவ பதாகை சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது…

24
Advertisement

சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள இரும்புலியூரில், தாம்பரம் திமுக சார்பில், தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெறுகிறது.

38 மாவட்ட அணிகள் பங்கேற்கும் இந்த மாபெரும் கபடி போட்டியினை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைக்க உள்ளார். இந்நிலையில் விழா மேடை அருகே வைக்கப்பட்டு இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவ படம் பொருத்திய கட் அவுட் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இருப்பினும் இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.