முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

300

தமிழகத்தில் 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழக அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறைக்கும் புனேவில் உள்ள டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

தொழில் நிறுவனங்களுடன் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் இணைந்து 2 ஆயிரத்து 877 கோடி ரூபாயில் தரம் உயர்த்தப்பட்டு நவீன தொழில்நுட்ப மையமாக உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.