ரூபாய் 139 கோடியில் புதுப்பிக்கப்படுகிறது சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம்

316
Advertisement

139 கோடி ரூபாய் செலவில் சென்னை சேப்பாக்கம் மைதானம்
புதுப்பிக்கப்படுகிறது.62,000 சதுர அடியிலிருந்து 77 ஆயிரம் சதுர அடியாக சேப்பாக்கம்
மைதானம் விரிவாக்கம் செய்யப்படுகிறது.சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் விரிவாக்கம்,
புதுப்பித்தலுக்கு மாநில அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது .

விரிவாக்கம் செய்யப்படுவதால் கூடுதலாக 36 ஆயிரம்
பார்வையாளர்கள் அமரும் வசதியுடன் மைதானம் தயாராகிறது.
நீர்நிலை, நீரோட்டம் சார்ந்த இடங்களில் விரிவாக்கப் பணிகள்
செய்யக்கூடாது என தமிழக அரசு நிபந்தனை விதித்துள்ளது .