10.5% இட ஒதுக்கீட்டுச் சட்டம்; வன்னியர்கள் முதல்வருக்கு கடிதம் எழுத அன்புமணி வலியுறுத்தல்..

99
Advertisement

சென்னை: கல்வி, வேலை வாய்ப்பில் வன்னியர் சமூகத்திற்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை விரைந்து நிறைவேற்ற அனைத்து வன்னியர்களும் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுத வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழகத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50 % உள் இட ஒதுக்கீடு என்ற சமூக நீதி இலக்கை எட்டுவதற்காக மருத்துவர் ராமதாஸ் வழிகாட்டுதலில் கடுமையான சட்டப் போராட்டங்களையும், அரசியல் போராட்டங்களையும் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறோம்.

2023 – 24ம் கல்வியாண்டு நெருங்கி விட்ட நிலையில், அதற்கு முன்பாக நமக்கான சமூக நீதியை நாம் வென்றெடுக்க நமது போராட்டத்தை விரைவு படுத்த வேண்டியதன் தேவையை உணர்த்தவே இந்த மடல். தமிழகத்தில் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் சமூகப் படிநிலையில் மிக, மிக பின்தங்கிய நிலையில் இருப்பது வன்னியர் சமூகம் தான்.

கையெழுத்துக் கூட போடத் தெரியாமல் கைரேகை வைக்கும் நிலையிலும், எழுதப் படிக்கத் தெரியாததால் ஏமாறும் நிலையிலும் தான் வன்னியர் சமூகம் வாடிக்கொண்டு இருந்தது. இந்த சமூகத்தை முன்னேற்ற வேண்டும் என்பதற்காகத்தான் 44 ஆண்டுகளுக்கு முன்பு சமூகநீதிப் போராட்டத்தைத் தொடங்கினார் மருத்துவர் ராமதாஸ்…