பியோனா’ புயல் காரணமாக ஜப்பான் பயணத்தை கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ ரத்து செய்தார்

207

பியோனா’ புயல் காரணமாக ஜப்பான் பயணத்தை கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ ரத்து செய்தார்

அட்லாண்டிக் கடலில் உருவான சக்தி வாய்ந்த ‘பியோனா’ புயல் கனடா நோக்கி நகர்ந்து, கனடாவின் கிழக்கு பகுதிகளை பந்தாடியது. மணிக்கு 179 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று சூழன்றடித்தது. இந்த புயலால் நோவா ஸ்கோடியா, நியூ பிரன்சுவிக், நியூபவுண்ட்லேண்ட் ஆகிய மாகாணங்களும், பிரின்ஸ் எட்வர்டு மற்றும் மாக்டலன் தீவுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டித்தீர்த்ததால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகின.

குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததுடன், கடற்கரையோரத்தில் இருந்த ஏராளமான வீடுகள் கடலில் அடித்து செல்லப்பட்டன. மக்களின் இயல்பு முற்றிலுமாக முடங்கியுள்ளதால், புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட ராணுவத்தை அனுப்பியுள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். புயல் பாதிப்பு காரணமாக ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்க ஜப்பான் செல்ல இருந்த பயணத்தை ஜஸ்டின் ட்ரூடோ ரத்து செய்துள்ளார்.