மேம்பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து

  216
  bus accident
  Advertisement

  பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் கிழக்கு சக்வால் மாவட்டத்தில் கராச்சி நோக்கி நேற்று இரவு ஒரு பேருந்து சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்தில் 35-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.

  பஞ்சாப் மாகாணத்தின் கான்வால் மாவட்டத்தில் உள்ள மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது பேருந்தின் டயர் திடீரென வெடித்தது. இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மேம்பாலத்தில் இருந்து கீழே கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

  இந்த கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 28 பேர் படுகாயமடைந்தனர்.

  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.