அதிமுக முன்னாள் அமைச்சர் வரம்பு மீறி பேசுவதாக பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

135
Advertisement

ஜெயலலிதாவை ஊழல்வாதி என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் விடுத்துள்ள அறிக்கையில், ஜெயக்குமார் வரம்பு மீறி பேசுவதாக கண்டனம் தெரிவித்தார். கூட்டணியில் பெரியண்ணன் வேலை யாருக்கும் கிடையாது  என்று குறிப்பிட்டுள்ளார்.

நுனியில் அமர்ந்து கொண்டு அடிக்கிளையை ஜெயக்குமார் வெட்டுவதாக கரு நாகராஜன் விமர்சனம் செய்துள்ளார்.