மும்மொழி கொள்கை குறித்து அமைச்சர் பொன்முடியுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் என்று அறிவித்துள்ள பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ….

168
Advertisement

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் தற்போது நடைபெறும் வருமான வரித்துறை சோதனை, எதிர்பார்த்ததுதான் என்று தெரிவித்தார்.

வருமான வரித்துறை சோதனை விவகாரத்தில் தி.மு.க-வினர் தன் மீது குற்றம் சுமத்துவதாக கூறிய அவர், வருமான வரிசோதனைக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார். தவறு செய்தவர்கள் வீட்டில் சோதனை நடைபெறுவதாகவும் அண்ணாமலை தெரிவித்தார். மேலும், மும்மொழி கொள்கை குறித்து அமைச்சர் பொன்முடியுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் என்றும், இடத்தையும் நேரத்தையும் கூறினால், விவாதத்திற்கு வருவதாக தெரிவித்துள்ளார்.