AI தொழில்நுட்பத்தால், கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு வேலைவாய்ப்புகள் மாயமாய் மறைந்து விட்டதாக பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்…..

159
Advertisement

அமெரிக்காவில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு 2023 மாநாட்டில் மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி பில் கேட்ஸ் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், தொழில்நுட்பத்துறை சிறந்த செயற்கை நுண்ணறிவு முகவரை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது என்றும், இதன் வருகை, இன்றைய இணைய தேடுபொறிகளை ஒழித்துவிடும் எனவும் கூறினார். புதிய தொழில்நுட்பத்தால், உற்பத்தித்துறை மற்றும் ஆன்லைன் ஷாப்பிங்கை அதிகம் பாதிக்கும் என்றும், மனிதர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட, AI உதவியுடன் செயல்படும் ரோபோக்களுக்கு விலை குறைவு எனவும் அவர் தெரிவித்தார். AI தொழில்நுட்பத்தால் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு வேலைவாய்ப்புகள் மாயமாய் மறைந்து விட்டது என்றும் அவர் கூறினார்.