கிராமங்களுக்கு அதிவேக இணையதள சேவை – பாரத் நெட் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்

356

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 12 ஆயிரத்திற்கும் அதிகமான கிராம ஊராட்சிகளுக்கு இணையதள சேவை வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாரத் நெட் – இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ், கம்பி இழை பதிக்கும் திட்டத்தை இன்று காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 525 கிராமங்களுக்கு அதிவேக இணையதள சேவை இந்த தி்ட்டத்தின் மூலம் வழங்கப்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் முத்தாலக்குறிச்சி கிராமத்தில் கண்ணாடி கேபிள் இழைகள் பதிக்கும்பணி தொடங்கியது.

சுமார் 1,627.83 கோடிரூபாய் மதிப்பீட்டில்,  பாரத் நெட்  இரண்டாம் கட்ட திட்டப்பணிகள் செயல்படுத்தப்படுகிறது.