“தமிழகத்தில் இருந்து அதிக வீரர்கள் பங்கேற்க வேண்டும்”

  62
  Athlete-Mariappan
  Advertisement

  பாரா விளையாட்டு போட்டிகளுக்கு அதிக கவனமும், ஊக்கமும் கிடைக்க தொடங்கி உள்ளதாக தடகள வீரர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

  டோக்கியோ பாராலிம்பிக் வீரர்களுக்கான பாராட்டு விழா, இந்தியன் வங்கி சார்பில் சென்னையில் நடைபெற்றது.

  இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாரியப்பன், பாரா விளையாட்டு போட்டிகளுக்கு தற்போது அதிக கவனமும், ஊக்கமும் கிடைக்க தொடங்கி இருப்பதாக தெரிவித்தார்.

  தமிழகத்தில் இருந்து அதிக வீரர்கள், பாரா விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

  Advertisement