அம்பையரா இருந்த இவர் இப்படி ஆகிட்டாரா?

230
Advertisement

சாதாரண கிரிக்கெட் வீரர்கள் பலரையும் உலகயே திரும்பி பார்க்க செய்துள்ள பெருமை IPLஐ சேரும்.

ஆனால், IPLஆல் ஒரு சிலரின் வாழ்க்கையே தலைகீழாக மாறியும் உள்ளது. 80களில் பாகிஸ்தான் அணியில் சிறந்த வீரராக அறியப்பட்ட ஆசாத் Rauf, form இழந்த பின் 2000ஆம் ஆண்டு முதல் 2013 வரை அம்பயர் ஆக பணியாற்றி வந்தார்.

இவர் இதுவரை 49 டெஸ்ட், 23 T20 மற்றும் 98 சர்வதேச ஒரு நாள் மேட்ச்களுக்கு நடுவராக இருந்துள்ளார்.

2013இல் IPL தொடரில் match-fixing  சூதாட்ட மோசடியில் ஈடுபட்டதற்காக BCCI, ஆசாத்துக்கு ஐந்து வருடம் தடை விதித்தது. கிரிக்கெட் கனவு சிதைந்து போனாலும், மனம் தளராமல் பாகிஸ்தானில் ஜவுளி, செருப்பு கடை  வைத்து நடத்தி வருகிறார்.

எந்த வேலை செய்தாலும், தன்னுடைய தனித்துவமான திறமையை காட்ட முடியும் என கூறும் ஆசாத், வணிகத்திலும் தன்னால் சாதித்து காட்ட முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.