கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 3 ஆயிரத்து 632 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற உள்ளது.

110
Advertisement

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டமன்ற தேர்தல், மே மாதம் 10ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 13ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்று மாலையுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது. கடைசி நாளான நேற்று ஒரே நாளில் 935 பேர் மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், கர்நாடக சட்டமன்ற தேர்தலில் மொத்தமாக 3 ஆயிரத்து 632 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். ஆண்கள் 3 ஆயிரத்து 327 பேரும், பெண்கள் 304 பேரும், ஒரு திருநங்கையும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதைதொடர்ந்து வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற உள்ளது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற வரும் 24ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.