2 விக்கெட்டில் 2 ஸ்டம்ப்பை அலற விட்ட அர்ஷ்தீப் சிங்! 20 லட்சம் நஷ்டம் ஆன BCCI…!

97
Advertisement

மும்பை வான்கடே மைதானத்தில் சனிக்கிழமை நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பஞ்சாப்  கிங்ஸ் அணியோடு மோதின.

20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களை பஞ்சாப் அணி எடுத்த நிலையில், 215 ரன்களை இலக்காக கொண்டு மும்பை அணி காலத்தில் இறங்கியது.

இறுதி ஓவரில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் வெறும் 2 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை அதிரடியாக அனல் பறக்கும் ஸ்டைலில் வீழ்த்தினார் அர்ஷ்தீப் சிங். திலக் வர்மா மற்றும் நேகல் வதீரா ஆகியோரின் விக்கெட்டுகளை எடுக்கும் போது மிடில் ஸ்டம்ப் உடைந்து சிதறியது.

எல்.இ.டி விளக்குகளுடன் கூடிய ஒரு ஜோடி ஸ்டம்ப்பின் விலை சுமார் 20 லட்ச ரூபாய் என்று ஊடங்களில் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்ஷ்தீப் சிங் பிசிசிஐக்கு நஷ்டம் ஏற்படுத்தி விட்டதாக நெட்டிசன்கள் நகைச்சுவையாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.