முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

88

அரியலூர் மாவட்டம் பெரியாக்குறிச்சி எம்ஜிஆர் நகரில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள மின்மாற்றி பழுதடைந்ததால், 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வழங்காததாக தெரிகிறது.

இதனால் அவதியடைந்த மக்கள், குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், மின்மாற்றியை சரிசெய்து, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.