2026 சட்டமன்ற தேர்தலில் பா.ம.க தலைமையில் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடிப்போம் என்று, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்…

141
Advertisement

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

மதுவை மக்களிடம் திணித்துக் கொண்டிருக்கும் தமிழக அரசு, மதுவிலக்கு கொள்கையை தெளிவுபடுத்த வேண்டும் என்று தெரிவித்தார். தமிழகத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளதாக குறிப்பிட்ட அவர், இதுபோன்ற பள்ளிக்கூடங்களில் போதுமான கட்டமைப்பு உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

நாடாளுமன்ற தேர்தலில் வியூகம் வகுத்து செயல்படுவோம் என்றும், 2026 சட்டமன்ற தேர்தலில் பா.ம.க தலைமையில் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடிப்போம் என்றும், அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்தார்.