பிராமணியத்தை திமுக எதிர்த்ததால்தான் அண்ணாமலை ஐபிஎஸ் ஆக முடிந்தது: ஆர்.எஸ். பாரதி பொளேர்..!

70
Advertisement

“திமுக பிராமணர்களுக்கு எதிரி கிடையாது.. பிராமணியத்துக்குதான் எதிரி..

அப்படி அந்த தியரியை நாங்கள் வகுத்ததால்தான், அண்ணாமலையே ஒரு ஐபிஎஸ்ஸாக வந்திருக்கிறார்.. ஆடு, மாடு மேய்த்த அண்ணாமலை போன்றவர்களை, ஐபிஎஸ் ஆக்கியது திராவிட இயக்கம்தான்” என்று திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி காட்டமாகக் கூறியுள்ளார். நமது “ஒன் இந்தியா தமிழுக்கு” அளித்த சிறப்பு பேட்டியில், அண்ணாமலையை கடுமையாகவும் ஆர்எஸ் பாரதி விமர்சித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒருவர் பேட்டி அளித்துள்ளார்.. அதில், “தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக 21 ஆதீனங்கள் தமிழகத்தை விட்டு வெளியே சென்றுள்ளனர். இது ஒரு சரித்திர நிகழ்வாகும்.

இதை நான் ஏஎன்ஐ பேட்டியிலேயே தைரியமாக சொல்லியிருக்கிறேன்.. இதை சொல்ல எனக்கு துளியும் பயம் கிடையாது. பிராமணர்களை தேடித்தேடி வேட்டையாடினீர்கள், மிரட்டினீர்கள், அவர்களை வெளியேற்ற முயற்சி செய்தீர்கள்.1951-ல் இதுக்காக போராடி, இதுக்கான முதல் அரசியலமைப்பு சட்டத்தை கொண்டு வந்தோம்.. இதுக்கப்புறம்தான் அண்ணாமலையே பிறந்திருப்பார்.. பள்ளிக்கூடத்திலயும் அண்ணாமலை சேர்ந்திருக்க முடியாது.. படிச்சிருக்கவும் முடியாது.. மடாதிபதிகள்: நாங்க பிராமணர்களை அழிச்சிட்டோமோ?

எந்த பிராமணர்களை அழித்தோம்? இதோ சிம்சன் இப்பவும் இருக்கு இல்லே? டிவிஎஸ் இருக்கு இல்லே? எத்தனை முதன்மை செயலாளர்கள் இங்கு இருந்தார்கள்? இப்பவும் இருக்கிறார்களே? ஜெயலலிதாவும் இருந்தாங்களே.. எல்லாரையும் நெருக்கடி தந்து அழித்து விட்டோமோ? திமுக எப்போது ஒரே நிலைப்பாட்டில் பயணிக்கிறது.. இன்று சொல்லப்போனால் கலைஞருக்கு நெருக்கமாக இருந்தவர்கள் எல்லாருமே பிராமணர்கள்தான்.. எனக்கு இன்னும் பிராமண நண்பர்கள் இருக்கிறார்கள்.. நான் எத்தனையோ பிராமணர்களுடன் நெருக்கமாக பழகியும் வருகிறேன்.. இதெல்லாம் பலமுறை சொல்லியாச்சு.. அத்தனை முறை சொல்லியும் அண்ணாமலைக்கு புரியலேன்னா, என்ன பண்ண முடியும்?