கொரோனா கூடாரமாக மாறும் அண்ணா பல்கலைக்கழகம்..?

620

சென்னை ஐ.ஐ.டி.யில் 198 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திலும் கொரோனா தொற்று பரவியுள்ளது.

இன்று மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மொத்தம் இதுவரை 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 160 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ள நிலையில், தொடர்பில் இருந்த அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.