போதை மருந்து கொடுத்து 5 கொரிய பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக பிரமுகர் பாலேஷ் தன்கரை குற்றவாளி என்று ஆஸ்திரேலியா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது…

122
Advertisement

ஆஸ்திரேலியாவில், பாஜகவின் வெளிநாடு வாழ் நண்பர்கள் அணியின் முன்னாள் தலைவராக இருந்தவர் பாலேஷ் தன்கர்.

இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான இவர், 5 கொரிய பெண்களுக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. அவர் மீது ஏராளமான பாலியல் வழக்குகள் நிலுவையில் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. செல்போன்களில் இருந்த வீடியோவில், அவர் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது பதிவாகியிருந்தது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பாஜக பிரமுகர் பாலேஷ் தன்கர் குற்றவாளி என்று ஆஸ்திரேலியா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.