செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு

460
Advertisement

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் செஸ் ஒலிம்யாட், 1927-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. 2022-ம் ஆண்டுக்கான போட்டி ரஷ்யாவில் நடைபெறவிருந்த நிலையில் , அங்கு நிலவும் சூழலில் இந்த முடிவு கைவிடப்பட்டது.

நிலையில், தற்போது 2022-ம் ஆண்டுக்கான ஏலத்தில் வென்றதன் மூலம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் நடைபெற இருக்கிறது.

பல்வேறு நாடுகளின் வீரர்கள், பயிற்சியாளர்கள், அணி மேலாளர்கள் என 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் போட்டி என்பதால் விமானப் போக்குவரத்து, தங்குமிட வசதி உள்ளிட்டவை கருத்தில் கொண்டு டெல்லி அல்லது சென்னையில் போட்டியை நடத்த பரிசீலிக்கப்பட்டது.

இறுதியில் சென்னையில் போட்டி நடத்தப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி ஜூலை 28‍-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. முன்னதாக செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்கும் அணிக்கு மே 8-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை மாமல்லபுரத்தில் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியை இன்று அறிவித்துள்ளது அகில இந்திய செஸ் கூட்டமைப்பு.

இளம் கிராண்ட் மாஸ்டர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா, அதிபன் உள்ளிட்ட 20 பேர் போட்டியில் பங்கேற்க உள்ளனர். 20 பேர் கொண்ட இந்திய அணிக்கு கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஆலோசகராக இருப்பார் என்று அகில இந்திய செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.