அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று கூடுகிறது..!

121
Advertisement

கடந்த ஆண்டு ஜுலை மாதம் 11ஆம் தேதி அதிமுக சட்ட விதிகளில் மாற்றம் செய்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சட்ட விதிகளில் மாற்றம் செய்ததை அங்கீகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் அதிமுக விவகார வழக்குகள் நிலுவையில் இருந்ததன் காரணமாக, இந்த சட்ட விதிகளை தேர்தல் ஆணையம் இணையத்தில் பதிவேற்றாமல் இருந்தது. இந்நிலையில் இந்த சட்ட விதிகளை முழுமையாக அங்கீகரித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இணையத்தில் பதிவேற்றியுள்ளது.

தேர்தல் ஆணையம் இணையத்தில் அதிமுகவின் சட்ட விதிகளை பதிவேற்றம் செய்ததன் மூலம், அதிமுக-விற்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது. இந்நிலையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகங்கள், பூத் கமிட்டிகள் போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.