நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மௌனமாக இருப்பது ஏன் என்று, அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்…

17
Advertisement

சேலம் மாவட்டம் தாதகாப்பட்டியில் அ.தி.மு.க சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. கொட்டும் மழையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 30 ஆயிரம் கோடி ரூபாய் ஊழலை, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அம்பலப்படுத்தி உள்ளதாக தெரிவித்தார். ஊழல் ஒழிப்பு குறித்து பேசும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த ஆடியோ குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்கள் தப்பிக்க முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.