அதிமுக-வில் ஒற்றைத்தலைமை விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
அதிமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத்தலைமை அவசியம் என பெரும்பாலானோர் கருத்து தெரிவித்ததாக நேற்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
இதனால், வரும் 23-ஆம்தேதி நடைபெறும் அதிமுக-வின் பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத்தலைமை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் இல்லத்தில் நேற்று இரவும், இன்று காலையும் தொடர் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இந்தகூட்டத்தில், துணைஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், தேனி மாவட்ட செயலாளர் சையதுகான், நெல்லை மாவட்ட செயலாளர் கணேஷ் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதேபோல, எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திலும் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, உதயகுமார், காமராஜ் உள்ளிட்டோரும் கலந்துகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.