மகன் கண் முன்னே தாய் உயிரிழந்த சோகம்

342

செங்கல்பட்டு மாவட்டம் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கள்ளபிரான்புரத்தை சேர்ந்த தாயும், மகனும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அத்திமானம் என்ற இடத்தில் பின்னால் வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக இருசக்கரவாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மகன் கண்முன்னே முருகம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயமடைந்த விக்னேஷுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.