ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் ராணுவ அமைச்சர்களின் இரண்டு நாள் கூட்டம் டெல்லியில் இன்று தொடங்குகிறது…

98
Advertisement

ஷாங்காய் கூட்டமைப்பில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் ராணுவ அமைச்சர்களின் கூட்டம் டெல்லியில் இன்று தொடங்குகிறது. 2 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டதில், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளில் ராணுவ அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். ஆனால் இந்த கூட்டத்தை பாகிஸ்தான் புறக்கணித்துள்ளது. இந்த கூட்டத்தில் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விவாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. சர்வதேச மற்றும் பிராந்திய நிலவரம், பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

Next இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டத்தில் பங்கேற் இந்தியா வரும் சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் லி ஷாங்பு, இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அப்போது, பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பு, ஷாங்காய் கூட்டமைப்பு நாடுகளில் தீவிரவாதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து இரு நாட்டு பாதுகாப்பு அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். மேலும், இந்தியா, சீனா எல்லை விவாகரம் தொடர்பாகவும், இருநாட்டு பாதுகாப்புதுறை அமைச்சர்கள் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.