கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல், தடுத்து தாக்கிய புகாரில், 2 திமுக கவுன்சிலர்கள் உட்பட மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்….

94
Advertisement

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 4-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூரில் ராமகிருஷ்ணபுரத்தில்  அமைந்துள்ள செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில், சோதனை நடத்த சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளை சுற்றிவளைத்து அவர்களிடம் அடையாள அட்டை கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுகவினர், கார் கண்ணாடிகளை உடைத்து, அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. கரூர் அரசு மருத்துவமனையில் 3 நாட்களாக சிகிச்சையில் இருந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 4 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

வருமானவரித்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 20வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர் லாரன்ஸ், 16வது வார்டு கவுன்சிலர் பூபதி, முன்னாள் கவுன்சிலர் ஜோதிபாசு உள்ளிட்ட 9 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதே போன்று, ராயனூரில் உள்ள கொங்கு மெஸ் உணவக உரிமையாளர் சுப்பிரமணி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டபோது, தகராறில் ஈடுபட்ட செல்வம் என்பவரை தாந்தோன்றிமலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.