தஞ்சை அருகே, 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு  25 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது….

111
Advertisement

 தஞ்சை மாவட்டம், சுவாமிமலை அருகே உள்ள இன்னம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன்குமார்.

இவர் பொறியியல் படிப்பு படித்து வந்தபோது,  அதே பகுதியைச் சேர்ந்த  17 வயது சிறுமியை காதலித்து வந்தாக கூறப்படுகிறது. அப்போது இளைஞர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததால் அவர் கர்ப்பமடைந்துள்ளார். கரு கலைப்புக்கு பிறகு சிறுமியை திருமணம் செய்ய பிரவீன் குமார் மறுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின்பேரில், இளைஞர் பிரவீன்குமாரை  போலீசார் போக்சோவில் கைது செய்தனர். இந்த வழக்கு  தஞ்சை போக்சோ  நீதிமன்றத்தில்  நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம்சாட்டப்பட்ட்ட  பிரவீன்குமாருக்கு 25 ஆண்டு சிறைதி தண்டனையும்,1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார்