சீனாவில் பரவி வரும் புதிய வகை வைரஸ்: முழு ஊரடங்கு அறிவிப்பு!

308
Advertisement

கடந்த 2019ம் ஆண்டுல் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இதனால் பலகோடி மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை கொண்டுவந்தது. இன்னொருபுறம் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் சீனாவில் மீண்டும் புதிய வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

சீனாவில் ஏறக்குறைய 90 லட்சம் மக்கள் வசித்து வரும் சாங்சுன் பகுதியில் புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதையடுத்து, சாங்சுன் நகர் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன.