கடந்த சில வாரங்களுக்கு முன் டெல்லியில் அண்ணாமலை – அமித் ஷா – எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சந்திப்பு நடத்தினர். அந்த சந்திப்பில் சுமார் 50 நிமிடங்கள் இவர்கள் நீண்ட ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மீட்டிங்கிற்குப் பின் மாநில பாஜக தலைவர் அண்ணாமலையுடன் எங்களுக்கு எந்தத் தகராறும் இல்லை, என்று எடப்பாடி பழனிசாமி புதிய நிலையை எடுத்தார்.
இதனால் அதிமுக – பாஜக ஒன்றாக இருக்கும் என்று கருதப்பட்டது. இந்த நிலையில்தான் ஜெயலலிதா பெயரை குறிப்பிடாமல்.. முதல்வர்கள் ஊழலுக்காக சிறைக்கு சென்ற ஊர் இது என்று அண்ணாமலை பேசியது அதிமுக – பாஜக கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தியது.
இன்று நடக்க போகும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மாநாட்டில் சில முக்கியமான விஷயங்களை முடிவு எடுப்பார்கள். பாஜகவுடன் சேர வேண்டும் என்று அதிமுகவில் சிலர் கூறுகின்றனர். பாஜக வேண்டாம் என்றும் சிலர் கூறுகின்றனர். அதனால் பாஜகவுடன் செல்ல வேண்டுமா, வேண்டாமா என்று இன்று அதிமுகவில் முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது, என்று கூறி உள்ளார்.