விரைவில் சீரமைக்கப்படவுள்ள ozone ஓட்டை

397

ஓசோனில் ஏற்பட்ட ஓட்டை அடுத்த 50 ஆண்டுகளில் மூடப்படும் என்று அமெரிக்காவில் உள்ள தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் கணித்துள்ளது.

வானிலை மாற்றம் மற்றும் மனிதனால் ஏற்பட்ட ரசாயனங்களால்  ஆண்டு தோறும் பூமியின் தெற்கு பகுதியில் உள்ள ஓசோனில் துளை உருவாகியது. இந்நிலையில், கடந்த 1980 ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது ரசாயனங்களின் செறிவு 50% குறைந்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், 2070-ம் ஆண்டுக்குள் ஓசோனில் ஏற்பட்டுள்ள ஓட்டை மூடப்படும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.