படகு கவிழ்ந்த விபத்தில் 76 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்

239

நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 76 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், 85 பேருடன் நைஜர் ஆற்றில் படகு சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக படகின் இயந்திரம் திடீரென பழுதடைந்ததால், ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் படகு அடித்து செல்லப்பட்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணித்த 85 பேரும் நீரில் மூழ்கி, உயிரை காப்பாற்றி கொள்வதற்காக தத்தளித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணுவத்தினர் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் 76 பேரை சடலமாக மீட்டனர். மேலும் காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.