கலப்பட மதுபானம் குடித்த 4 பேர் பலி – 41 பேர் மருத்துவமனையில் அனுமதி

62
Advertisement

உத்தரப் பிரதேச மாநிலம் அசம்கர் மாவட்டத்தில் கலப்பட மதுவை குடித்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 41 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கலப்பட மதுவை உட்கொண்ட 20 பேர் மயக்கமடைந்த நிலையில் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்ததாக அசம்கர் மாவட்ட மாஜிஸ்திரேட் அம்ரித் திரிபாதி தெரிவித்தார்.

இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அசம்கர் மாவட்ட காவல்துறை ஆணையர் விஜய் விஷ்வாஸ் பண்ட் தெரிவித்துள்ளார்.

Advertisement