“4 நாட்களுக்கு மழை தொடரும்”

Advertisement

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரலாக கனமழை பெய்த, நிலையில், 4 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனத்தால் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது.

சென்னை எம்.சி.ஆர் நகர், பட்டினப்பாக்கம், சாந்தோம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. தாம்பரம், பெருங்களுத்தூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

அம்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.

Advertisement