2,713 புதிய பேருந்துகள்

197
Advertisement

தமிழ்நாடு அரசு வரவு செலவு திட்டம் 2022- 2023

மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு 2022- 2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவு திட்டத்தை சட்டசபையில் மார்ச் 18 ஆம் தேதியான இன்று தாக்கல் செய்துள்ளது.

நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாராஜன் அந்த நிதிநிலை அறிக்கையை அதிமுக எம்எல்ஏக்களின் கடும் அமளிக்கு இடையே வாசித்தார்.

இந்த வரவு- செலவுத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

மொத்தம் 2,713 புதிய பேருந்துகள் வாங்கப்படும். இதில் 500 மின்சாரப் பேருந்துகள். மற்ற 2213 பேருந்துகள் டீசலில் இயங்குபவை.

இல்லம் தேடிக் கல்வித் திட்டத்துக்கு ரூ 200 கோடி ஒதுக்கீடு.

சென்னை நந்தம்பாக்கத்தில் ரூ 75 கோடியில் புத்தொழில் உருவாக்க மையம் அமைக்கப்படும்.

கோவையில் கைத்தொழில் மேம்பாட்டுக் குழுமம் அமைக்க ரூ 5 கோடி ஒதுக்கீடு.

1000 ஆண்டு பழமையான, சிதிலமடைந்த கோவில்களைப் புதுப்பிக்க ரூ 100 கோடி ஒதுக்கீடு.

மாநகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கும் திட்டத்துக்கு ரூ 1,520 கோடி ஒதுக்கீடு.

சென்னைத் துறைமுகம்- மதுரவாயல் உயர்மட்ட சாலைத் திட்டத்துக்கு 5,770 கோடி.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்ய ரூ 1000 கோடி.