சிவகாசி மாநகராட்சியில் 10 அ.தி.மு.க. கவுன்சிலர்கள் திடீர் மாயம்

291
Advertisement

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல், சிவகாசி நகராட்சிகள் இணைக்கப்பட்டு 48 வார்டுகளுடன் சிவகாசி மாநகராட்சி உருவானது. இந்த மாநகராட்சி முதன் முறையாக தற்போது தேர்தலை சந்தித்தது.

இந்த தேர்தலில் தி.மு.க. 24 வார்டுகளில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. 11 இடங்களை கைப்பற்றியது.

இந்த நிலையில் அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற 11 பேரில் 10 பேர் திடீரென மாயமாகி விட்டனர். தற்போது வரை அவர்கள் எங்கு சென்றார்கள்? என்பது மர்மமாக உள்ளது.

மாவட்ட அ.தி.மு.க. தலைமைக்கு நெருக்கமான கவுன்சிலர்களும் மாயமாகி உள்ளனர். மாவட்ட தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் சென்றார்களா? என்பது தெரிய வில்லை.