Advertisement
தமிழகத்தில் பல மாதங்களுக்கு பின் நேரடி மருத்துவ வகுப்புகள் தொடங்கின.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட மருத்துவ கல்லூரிகள் பல மாதங்களுக்கு பின் இன்று திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கின. அரசு, தனியார் என மொத்தம் 60 மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில் திருச்சி மருத்துவ கல்லூரியில் மொத்தம் 750 மாணவ, மாணவிகள் வருகை தந்தனர்.
Advertisement
அதில் 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.