இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆளும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை.

118
Advertisement

ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட், சச்சின் பைலட்  என இரு தலைவர்களிடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. 2018ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்குபின்னர் முதலமைச்சர் பதவியை இளம் தலைவர் சச்சின் பைலட் எதிர்பார்த்தார். ஆனால், அந்த பதவி கட்சியின் மூத்த தலைவரான அசோக் கெலாட்டுக்கு கிடைத்தது.இதன் காரணமாக இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருவதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு அங்கு சட்டசபை தேர்தல் வர உள்ளநிலையில், முந்தைய முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான பாஜக அரசின்  ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த அசோக் கெலாட் அரசை வலியுறுத்தி சச்சின் பைலட் நேற்று ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆளும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை. ஆனால், சச்சின் பைலட் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் ராஜஸ்தான் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது