யாருக்கெல்லாம் சாகித்ய அகாடமி விருது…

225
Advertisement

எழுத்தாளர் இமையத்துக்கு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாகித்ய அகாடமி விருது வழங்கி கௌரவிப்பட்டது.

2020ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் டெல்லியில் நேற்று வழங்கப்பட்டன. தமிழில் எழுத்தாளர் இமையம் எழுதிய செல்லாத பணம் நாவலுக்கு கடந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டிருந்தது.

சாகித்ய அகாடமி தலைவர் சந்திரசேகர் காம்பர் எழுத்தாளர் இமையத்துக்கு விருதினை வழங்கினார்.

சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் இமையத்துக்கு ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலை, செப்புப் பதக்கம் வழங்கப்பட்டது.

சென்னையைச் சேர்ந்த கவிஞர் அருந்ததி சுப்ரமணியத்துக்கு When God is a Traveller என்ற ஆங்கில கவிதை நூலுக்கு விருது வழங்கப்பட்டது.

கன்னட மொழியில் பாகுபலி அகிம்சா திக்விஜயம் கவிதை நூலுக்காக காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லிக்கு விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 22 மொழிகளுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன.