மெகா தடுப்பூசி முகாம்; 6 மணி நிலவரப்படி 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி

252
Advertisement

தமிழகம் முழுவதும் நடைபெற்ற முகாம்களில் 6 மணி நிலவரப்படி 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


கடந்த 12ம் தேதி தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்களில் நடத்தப்பட்டது.

இதில் இதுவரை இல்லாத அளவிற்கு 28 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு புதிய சாதனை படைத்தது. இதனைத்தொடர்ந்து நேற்று இரண்டாவது மெகா தடுப்பூசி முகாம், சுமார் 20 ஆயிரம் மையங்களில் நடத்தப்பட்டது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் நடைபெற்ற முகாம்களில் 6 மணி நிலவரப்படி 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இரவு 7 மணி வரை தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது என்றும் தடுப்பூசிகள் கையிருப்பு தட்டுப்பாடுகள் உள்ளது எனவும் அவர் கூறினார்.