202 வாக்குறுதிகளை நிறைவேற்றிய திமுக அரசு: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

205
Advertisement

திமுக ஆட்சி அமைந்து இன்றுடன் 4 மாதங்கள் நிறைவு பெறும் நிலையில் தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டு இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்தடன் தெரிவித்துள்ளார்.


திமுக ஆட்சி அமைந்து இன்றுடன் 4 மாதங்கள் நிறைவு பெறுவதையோட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில், தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள வாக்குறுதிகளில் இதுவரை 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறினார்.

8 வழிச்சாலை திட்டங்களுக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட 5,570 வழக்குகள் வாபஸ், 3 வேளாண் சட்டங்கள், சி.ஏ.ஏ. சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான சட்ட முன்வடிவை பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார்.

அரசிற்கு ஆலோசனை வழங்கிட முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு அமைப்பு, அரசுப் பணிகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு 40% ஆக உயர்த்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆட்சி பொறுப்பேற்று திமுக எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு தெரிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் பதிலளிக்கும் வகையில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.