மருத்துவரான நடிகை நீட் தேர்வுக்கு எதிர்ப்பு

211
Advertisement

நீட் தேர்வினால் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவதாகவும், நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் இருப்பதாகவும் நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் நீட் தேர்வை எதிர்க்கும் மாணவர்கள் பக்கமே தான் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மருத்துவம் என்பது கடல் போன்ற படிப்பு என்றும், அதில் நுழைவு தேர்வு  நடத்துவதால் மாணவர்களுக்கு மனதளவில் பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்தார்.

மேலும் இந்த விவகாரத்தில் நீட் தேர்வு வேண்டாம் என்று கூறும் மாணவர்களின் பக்கமே தான் இருப்பதாகவும், நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.