புதிய ஆளுநர் இன்று சென்னை வருகை

289
Advertisement

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி இன்று இரவு சென்னை வருகிறார்.

நாளை ஆளுநராக பொறுப்பேற்க உள்ள அவருக்கு, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

தமிழ்நாட்டின் 14வது ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் தற்போது பஞ்சாப் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திமுக தலைமையிலான அரசு பதவி ஏற்று 4 மாதங்களில் புதிய ஆளுநர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், புலனாய்வு அதிகாரியுமான நாகலாந்து ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டின் அடுத்த ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி இன்று இரவு 8.40 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வர உள்ளார்.

நாளை ஆளுநராக பொறுப்பேற்க உள்ள ஆர்.என்.ரவிவுக்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.