பிரதமர் மோடி கொடுத்த காசு தரமுடியாது.. வங்கியில் தவறுதலாக செலுத்தப்பட்ட பணத்தை திருப்பியளிக்க மறுக்கும் நபர்!

211
Advertisement

வங்கி கணக்கில் தவறுதலாக வந்த ஐந்தரை லட்சம் ரூபாய் பணத்தை பிரதமர் மோடி கொடுத்ததாக நினைத்து செலவு செய்ததாக கூறிய இளைஞரால் வங்கி ஊழியர்கள அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பீகாரின் ககாரியா மாவட்டத்தில் உள்ள பக்தியார்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித் தாஸ். அங்குள்ள கிராம வங்கியில் அவர் கணக்கு வைத்துள்ளார்.

இந்த நிலையில், அவரது வங்கி கணக்கிற்கு திடீரென ஐந்தரை லட்சம் அனுப்பப்பட்டிருந்தது. வங்கி ஊழியர்களின் கவனக்குறைவால் நடந்த இந்த தவறை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

எனவே அந்த பணத்தை திரும்ப ஒப்படைக்குமாறு ரஞ்சித் தாசுக்கு வங்கி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். அதற்குள் பணத்தை எடுத்திருந்த ரஞ்சித் தாஸ், அதை செலவழித்துவிட்டார்.

தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பப்பட்ட போதும், அவர் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. அந்த பணம் பிரதமர் மோடி தனக்கு அளித்த பரிசு என நினைத்து செலவழித்து விட்டதாக கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி அதிகாரிகள், இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், ரஞ்சித் தாசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.